Tuesday, May 6, 2008

முத்தம்....

இரு இதயங்களில் கைக்குலுக்கல்
நம் முதல் முத்தம்!

ஒரே நேரத்தில் என்னுள் உயிரணுக்கள்
ஒவ்வொன்றையும் உயிர்ப்பிப்பது உன் முத்தம்,

ஒவ்வொரு முறையும்
நம் ஊடலின் முடிவுரை நம் முத்தம்,

காதல் மழையின் முதல் துளி
கூடலின் முகவுரை நம் முத்தம்....

உணர்ந்தேன் காதலின்
வல்லினம் உன் முத்தத்தில்...

உணர்த்தினேன் காமத்தின்
மெல்லினம் என் முத்தத்தில்...

உடல் துழாவி உயிர் தேடும் தருணம்,
உதடுகளின் ஸ்பரிசத்தில்...முத்தம்....இல்லை முக்தி!!

19 comments:

நவீன் ப்ரகாஷ் said...

ப்ரவீணா... நீண்ட நாட்களுக்கு பிறகு சத்தமில்லாத மெல்லின முத்தமாய் கவிதை... .. :)))

நவீன் ப்ரகாஷ் said...
This comment has been removed by the author.
நவீன் ப்ரகாஷ் said...

//இரு இதயங்களில் கைக்குலுக்கல்
நம் முதல் முத்தம்! //

இதயம் இதழ்களால் ஆனதாய் இருந்திருக்குமோ ஜெனி..??
;)))))

நவீன் ப்ரகாஷ் said...

//உணர்ந்தேன் காதலின்
வல்லினம் உன் முத்தத்தில்...

உணர்த்தினேன் காமத்தின்
மெல்லினம் என் முத்தத்தில்...//

மிகவும் ரசித்தேன் ப்ரவிணா...... வரிகளை இதழ்களால் எழுதினீர்களா என்ன....?? மெல்லினமும் வல்லினமும் முத்தியெடுக்கின்றன... :))))

நவீன் ப்ரகாஷ் said...

//உடல் துழாவி உயிர் தேடும் தருணம்,
உதடுகளின் ஸ்பரிசத்தில்...முத்தம்....இல்லை முக்தி!! //

பரவீணா.... முக்தியடையா இவ்வளவு அழகான வழியா..?? முக்தியடைய தூண்டுகின்றன வழிகள்... :)))

மொத்தத்தில் மெல்லினமாய் ஆரம்பித்த வல்லினமான கவிதை... மிக மிக அழகு... :)))))

Anonymous said...

சத்தமே இல்லாமல்
ரெம்பவே சிம்பிளான வரிகளில் முத்தங்கள்.

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

மெல்லினங்களும் வல்லினங்களுமாய் மெல்ல முத்தங்கள் அழகு :)

தமிழன்-கறுப்பி... said...

ரொம்ப நாளுக்கப்புறம் வந்தாலும் ரொம்ப நல்லாயிருக்கு...

தமிழன்-கறுப்பி... said...

\\\உடல் துழாவி உயிர் தேடும் தருணம்,
உதடுகளின் ஸ்பரிசத்தில்...முத்தம்....இல்லை முக்தி!! \\\


முத்தத்திற்கு மேலாக இன்னொரு பரிசை காதல் கண்டு கொள்ளவில்லை என்பது உண்மைதானே...

காமம் முக்தியின் முதல் நிலை காதல் அதன் பரவச நிலை...

U.P.Tharsan said...

//உடல் துழாவி உயிர் தேடும் தருணம்,
உதடுகளின் ஸ்பரிசத்தில்...முத்தம்....இல்லை முக்தி!!//

நல்ல சிந்தனை.. அட்டகாசம்

ரசிகன் said...

அட.. இப்டி கூட அருமையா சொல்ல முடியுமா?

கலக்கலா இருக்குங்க:)

வாழ்த்துக்கள்:)

//முத்தம்....இல்லை முக்தி!!//

இது டாப்பு:)

FunScribbler said...

////இரு இதயங்களில் கைக்குலுக்கல்
நம் முதல் முத்தம்! //

முதல் வரியே கலக்கல்!! ரொம்ப அழகான கவிதை! கலக்குங்க!!

தமிழன்-கறுப்பி... said...

எங்கே போய்விட்டீர்கள் ஜெனி...

Shwetha Robert said...

Who-hooo!!! very very nice Praveena.

Vishnu... said...

வலை தளங்களின் தேடல்களுக்கிடையே எனக்கு ..உங்கள் கவிதைகளை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது ..
அனைத்தும் அருமை ...

எஸ்.ஆர்.மைந்தன். said...

கவிதை அருமை

சென்ஷி said...

:)))

ஜி said...

:))) As usual kalakkals of World :)))

Praveena said...

நான் பதிவிட்ட கவிதைகளை படித்து, கருத்துக்களை பின்னூட்டத்தில் பகிர்ந்துக்கொண்ட உங்கள் அனைவருக்கும் நன்றி.

குறிப்பாக கவிஞர் நவீன் ப்ரகாஷிற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.