Friday, February 29, 2008

நினைவெல்லாம் நிறைந்து....

தொலைதூர பிரிவிலும்
தொல்லைக்கொடுக்கும்
உன் நினைவுகள்
நன்றாகத்தான் இருக்கின்றன.


உன் மீசை
குத்திய தடங்கள்
உன் இதழ்
பதித்த ஈரம்
உன் பற்கள்
செய்த காயங்கள்
இன்னும் ஆராமல்
மேலும் உன்னால் காயப்பட
காத்திருக்கின்றன...


உன் சுகமான
சுமையைவிட
உன் நினைவுகளின்
சுமைகள்
கனமாக இருக்கின்றன...


பேசாமல் கோபித்துக்கொண்ட
கணங்கள்
உன் குறும்புகளை ரசித்த
வெட்கங்கள்
பிரிவின் கணத்தை
ரணமாக்குகிறது..


அழகாய் இருப்பதாக
பொய் சொன்னேன் என
நீ வம்பிழுக்க...
உன்னிடம் யுத்தம் செய்யும் என்
உதடுகள்!!


ஊடலில் தான் நம்
தேடல் அதிகரித்தது.
நிறைவாகும் வரை தேடல்
தந்த வெப்பம் இன்றும்
தகிக்க வைக்கிறது...

12 comments:

நவீன் ப்ரகாஷ் said...

ப்ரவீனா :))
முதன் முறையாக வருகிறேன்...
கவிதை அழகோ அழகு ....
காதல் தோய்ந்த கவிதை....
எதை விடுப்பது ... எதை எடுப்பது என திணற வைக்கிறது....

வாழ்த்துக்கள் !!!! :)))

நவீன் ப்ரகாஷ் said...

//உன் மீசை
குத்திய தடங்கள்
உன் இதழ்
பதித்த ஈரம்
உன் பற்கள்
செய்த காயங்கள்
இன்னும் ஆராமல்
மேலும் உன்னால் காயப்பட
காத்திருக்கின்றன...//

வார்ரே வாவ்....:))))
காத்திருப்பதிலேயே இப்படி ஒரு காத்திருப்பா....?? மிக ரசித்தேன்.....

//பேசாமல் கோபித்துக்கொண்ட
கணங்கள்
உன் குறும்புகளை ரசித்த
வெட்கங்கள்
பிரிவின் கணத்தை
ரணமாக்குகிறது..//

எப்படி சொல்வது...? ரணமாக்கிய குறும்பு அழகா.. இல்லை கவிதையாக்கிய காதல் அழகா... :)))

ரசித்த குறும்பு... :))

Praveena said...

@நவீன் ப்ரகாஷ்,

உங்கள் முதல் வருகைக்கு நன்றிகள்.

ஒரு கவிஞரின் பார்வையும், ரசிப்பும் என் எழுத்துக்களுக்குக் கிடைப்பது என் கொடுப்பினை.

தொடர்ந்து உங்கள் வருகையையும் தருகையையும் எதிர்நோக்குகிறேன்!

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

செதுக்கப்பட்ட வரிகள்!!
பிரிவு தரும் வேதனையை இத்துனை அழகாக வடிக்கமுடியுமா??

ஒவ்வொரு வார்த்தையும் அழகு
ஒவ்வொரு வரியும் கவிதை!

வாழ்த்துக்கள் இப்ரவீனா :))

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

//பேசாமல் கோபித்துக்கொண்ட
கணங்கள்
உன் குறும்புகளை ரசித்த
வெட்கங்கள்
பிரிவின் கணத்தை
ரணமாக்குகிறது..//

வேதனையில் அதிகம் மூழ்கடிக்காமல் அதே சமயம் இரணத்தை அழகாக வர்ணித்துள்ளீர்கள்! மிகவும் இரசித்தேன்!!

//அழகாய் இருப்பதாக
பொய் சொன்னேன் என
நீ வம்பிழுக்க...
உன்னிடம் யுத்தம் செய்யும் என்
உதடுகள்!!//

அழகு அந்த போய்யா இல்லை அதனால் தொடங்கிய யுத்தமா :))

Praveena said...

\\ sathish said...
செதுக்கப்பட்ட வரிகள்!!
பிரிவு தரும் வேதனையை இத்துனை அழகாக வடிக்கமுடியுமா??

ஒவ்வொரு வார்த்தையும் அழகு
ஒவ்வொரு வரியும் கவிதை!

வாழ்த்துக்கள் இப்ரவீனா :))\\

சதீஷ்,
உங்கள் வருகை , உவகை அளித்தது!!
பிரிவின் வேதனையிலும்,
பரிவான நினைவுகள் இனிமைதானே?

Praveena said...

\\ sathish said...
//பேசாமல் கோபித்துக்கொண்ட
கணங்கள்
உன் குறும்புகளை ரசித்த
வெட்கங்கள்
பிரிவின் கணத்தை
ரணமாக்குகிறது..//

வேதனையில் அதிகம் மூழ்கடிக்காமல் அதே சமயம் இரணத்தை அழகாக வர்ணித்துள்ளீர்கள்! மிகவும் இரசித்தேன்!!

//அழகாய் இருப்பதாக
பொய் சொன்னேன் என
நீ வம்பிழுக்க...
உன்னிடம் யுத்தம் செய்யும் என்
உதடுகள்!!//

அழகு அந்த போய்யா இல்லை அதனால் தொடங்கிய யுத்தமா :))\\


இரண்டுமே அழகோ அழகுதான் !

காதலுக்கு அழகு சேர்ப்பதே பொய்யான பொய்களும்,
மெய்யான காதலும் தானே!!!

Praveena said...

\\ நவீன் ப்ரகாஷ் said...
//உன் மீசை
குத்திய தடங்கள்
உன் இதழ்
பதித்த ஈரம்
உன் பற்கள்
செய்த காயங்கள்
இன்னும் ஆராமல்
மேலும் உன்னால் காயப்பட
காத்திருக்கின்றன...//

வார்ரே வாவ்....:))))
காத்திருப்பதிலேயே இப்படி ஒரு காத்திருப்பா....?? மிக ரசித்தேன்.....

//பேசாமல் கோபித்துக்கொண்ட
கணங்கள்
உன் குறும்புகளை ரசித்த
வெட்கங்கள்
பிரிவின் கணத்தை
ரணமாக்குகிறது..//

எப்படி சொல்வது...? ரணமாக்கிய குறும்பு அழகா.. இல்லை கவிதையாக்கிய காதல் அழகா... :)))

ரசித்த குறும்பு... :))\\


ரணமாக்கிய குறும்பையும், கவிதையாக்குகிறது காதல்!!

குறும்பான ரசிப்பிற்கு நன்றிங்க நவீன் ப்ரகாஷ்:))

ஜி said...

attahaasamaa irukuthu ellaa kavithaigalum....

ennoda blogkku vanthathukku romba thankies...

innum neraya kavithais ezutha vaazthukkal :)))

Praveena said...

\\ ஜி said...
attahaasamaa irukuthu ellaa kavithaigalum....

ennoda blogkku vanthathukku romba thankies...

innum neraya kavithais ezutha vaazthukkal :)))\

வாழ்த்து கூற வந்தமைக்கு நன்றிங்க:)

சென்ஷி said...

ஒண்ணும் சொல்லிக்க முடியல...

Praveena said...

\\ சென்ஷி said...
ஒண்ணும் சொல்லிக்க முடியல...\

:))