Saturday, April 5, 2008

இதயத்தின் கதறல்....

கடல் தாண்டி போனவள்
கன்னியம் இழந்துவிட்டாளென
எண்ணிவிட்டாயோ??

காற்றாய் உன்னை சுவாசித்தவள்
பேச்சிலும் மூச்சிலும்
உன் நினைவை
சுமந்தவள்....
சுமையாகி போனாளோ????

மனமென்னும் கற்பத்தில்
கருவாய் உன்னை
சுமந்தவளின் உயிரை
கடும் வார்த்தைகளால்
கொல்வது ஏனடா???

சேயை இழந்த தாயாய்
தந்தையை இழந்த மகளாய்
இன்று
துடிக்கிறதே என் இதயம்...
கண்ணீரெனும் மருந்திட்டு ஆற்றிட
கரமொன்றும் இல்லையா??

நியாயமா நீ செய்தது
சிந்தித்துப் பார்
என் இரத்த துளிகளின்
கதறலுக்கு
பதிலேது????

7 comments:

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

கோபமும் வேதனையும்! வேகமாய் வரிகள்...

கதிர் said...

கவுஜ கவுஜ

ப்ரொபைல்ல இருக்கறது ஸ்ரேயா கோஷல் போட்டோதான?

காஞ்சனை said...

வலி..
அதற்கு மேல் சொல்லிட‌ வார்த்தைகள் இல்லை

நவீன் ப்ரகாஷ் said...

ஜெனிபர்..:))
மீண்டும் சோகமான ஒரு கவிதை... கதறலாக... ஏன்...??

Divya said...

வேதனையின் வலியினை ஒவ்வொரு வார்த்தையும் ஆழமாக உணர்த்துகிறது,

உங்கள் வேதனை விலகட்டும் துரிதமாக:

சத்யா said...

adadaa.. :) nemba feelingsa irukke!

ஜி said...

:(((