Thursday, July 10, 2008

நீயே என் கவிதை....

உன் கவிதைகளை நான்
எடுத்து சேகரித்தபோதுதான்
தெரிந்து கொண்டேன்
ஒவ்வொரு கவிதையிலும்
நானிருக்கிறேன் என்ற உண்மையை

உன் காதல் கவிப் புத்தகத்தை
என் நெஞ்சோடு அணைத்துக்
கொண்டேன்
என் நெஞ்சின் நேசம்
உன் கவிதைகளுக்காவது
புரியட்டுமென்று..


என்னை கவிதை
எழுத வைத்தது மட்டுமல்ல
கவிதையாய்
என்னை அழகாக்கியதும்
நீதான்..

என் கற்பனைகள்தான்
அதிகமாய் வாசகர்களுக்க்கு
காட்டிக் கொடுக்கிறது
உன்னை நான் கவிதையாய்
காதலிப்பதை

எல்லாரும் வெக்கப்பட
கவிதை எழுதுவார்கள்...நான்
வெக்கப்பட்டு கவிதைகளை
கிறுக்கிக்கொண்டிருக்கிறேன்

என்னவனே!
எப்படி என் கவிதைக்குள்
ஏதேனும்
ஒரு வார்த்தையின் வடிவில்
ரகசியமாய் வந்தமர
கற்றுக் கொண்டாய்?


உன்னைத் தவிர
எனக்கு எதுவும்
தெரிவதில்லை
இரு வரியானலும்
அதன் கரு நீயாக
இருக்கும் என் கவிதைபோல

வானவில்லாய் நீ
வந்து போனாலும்
வானமாய் காத்திருக்கும்
என் கவிதைகள் எப்போதும்
உனக்காக...

Monday, June 30, 2008

கோபத்திற்கு நிறம் உண்டா???

உன் ஆசையை காட்டுவதற்காக
இப்படியா
வார வாரம் என்னிடம் கோபம் பட்டு
பேசாமல் இருக்கிறாய்
சில தினங்கள்

உன் கோபங்களை விதைப்பதற்கு
என் மனதா கிடைத்தது
பாவம் அது வளர
என் கண்ணீரைக் கடன்
கேட்கிறது

உன் ஆண்மையை என்னிடம்
காட்ட விரும்புகிறாய் என்றால்
சொல்லியிருக்கலாமே
அதைவிட்டு என் மேல்
அடிக்கடி கோவித்துக் காட்டுகிறாய்

ஆசை
இருந்தால்தான்
கோவம் வருமான்னு
தெரியாது
ஆனால்
என் மீது கோபப்படும்
போதுதான் உன் ஆசைகள்
எல்லாம் புரிகிறது...

உன் நிறம் எனக்கு
பிடித்திருக்கும் போது
உன் கோபத்தின்
நிறம் மட்டும்
பிடிக்காமலா போய்விடும்???

Tuesday, May 6, 2008

முத்தம்....

இரு இதயங்களில் கைக்குலுக்கல்
நம் முதல் முத்தம்!

ஒரே நேரத்தில் என்னுள் உயிரணுக்கள்
ஒவ்வொன்றையும் உயிர்ப்பிப்பது உன் முத்தம்,

ஒவ்வொரு முறையும்
நம் ஊடலின் முடிவுரை நம் முத்தம்,

காதல் மழையின் முதல் துளி
கூடலின் முகவுரை நம் முத்தம்....

உணர்ந்தேன் காதலின்
வல்லினம் உன் முத்தத்தில்...

உணர்த்தினேன் காமத்தின்
மெல்லினம் என் முத்தத்தில்...

உடல் துழாவி உயிர் தேடும் தருணம்,
உதடுகளின் ஸ்பரிசத்தில்...முத்தம்....இல்லை முக்தி!!

Thursday, April 10, 2008

நிலவுக்கு வெட்கம்....

சமயலறையில் நான்...
நெருப்பின்றி சூடேற்றினாய் நீ,
'அடுப்பை' அணைக்கும் வரை நிறுத்தவேயில்லை...
ச்மைத்[ந்]தது' நான்..
'விருந்து' நம்மிருவருக்கும்!!

நிலவொளியில்
மொட்டை மாடியில்
முழுவதுமாய் உன் பிடியில்
மொத்தமாய் எடுத்துக்கொண்டாய்...
நிலவும் வெட்கத்தில்
மேகத்திற்குள் மறைந்துக்கொண்டது!!

நீ
டீஷர்ட் போட்டால்
ஜீன்ஸ் போடு,
ஜீன்ஸ் போட்டால்,
ஷு போட மறக்காதே...
நான்
சொன்னபடியெல்லாம் கேட்டாய்,
துப்பட்டா விலக்காதே,
இடுப்பில் கிள்ளாதே,
கேசம் கலைக்காதே...
என சொன்னால் மட்டும்
ஏன்டா கேட்க மறுக்கிறாய்????

'கள்ளி உன்னை
கிள்ள வேண்டும்போல்' இருக்கிறது என்றாய்,
'கண்ணா உன்னை
கடிக்க வேண்டும்போல் 'இருக்கிறது என்றேன் பதிலாய்,
கிள்ளுகளும், செல்ல கடிகளும்
காதலோடு காதலாகி
கலக்க வைத்தது நம்மை
கலந்தோம் ஒன்றாக
களைத்தோம் 'வெற்றி'யோடு!!!

Monday, April 7, 2008

தொடக்கமான முடிவு....நீ

என்னை...

மீட்டெடுத்ததும் நீ
கட்டுபடுத்துவதும் நீ...

கண்டிக்கலாம் நீ
காயப்படுத்தலாமா நீ...

விருப்பம் காட்டியது நீ
விஷம் கக்கியதும் நீ....

நெருக்கமான அணல் மூட்டியதும் நீ
நெருப்பு வார்த்தை கொட்டியதும் நீ....

என் முகம் ஏந்தியது நீ
என்னை முழுவதுமாய் எரித்ததும் நீ...

வாழ வழிகாட்டியது நீ
வாழ்வை வெறுக்க வைத்ததும் நீ...

Saturday, April 5, 2008

இதயத்தின் கதறல்....

கடல் தாண்டி போனவள்
கன்னியம் இழந்துவிட்டாளென
எண்ணிவிட்டாயோ??

காற்றாய் உன்னை சுவாசித்தவள்
பேச்சிலும் மூச்சிலும்
உன் நினைவை
சுமந்தவள்....
சுமையாகி போனாளோ????

மனமென்னும் கற்பத்தில்
கருவாய் உன்னை
சுமந்தவளின் உயிரை
கடும் வார்த்தைகளால்
கொல்வது ஏனடா???

சேயை இழந்த தாயாய்
தந்தையை இழந்த மகளாய்
இன்று
துடிக்கிறதே என் இதயம்...
கண்ணீரெனும் மருந்திட்டு ஆற்றிட
கரமொன்றும் இல்லையா??

நியாயமா நீ செய்தது
சிந்தித்துப் பார்
என் இரத்த துளிகளின்
கதறலுக்கு
பதிலேது????

Friday, April 4, 2008

நினைவிருக்கும்வரை.....நிறைந்திருக்கும்!!!

என் மனமெங்கும் நிறைந்திருக்கும்
என் சிந்தையிலே உறைந்திருக்கும்!!

பாடாத ராகம் ஆனேன்,
எரியாத தீபம் ஆனேன்,
விடியாத இரவானேன்,
முடியாத கதையானேன்...

என் நிலையை எனக்குணர்த்தி
தன் நிலைக்கு எடுத்துச் சென்றாய்!!

மீட்டாத வீணை ஆனேன்,
எழுதாத கவி ஆனேன்,
இனிப்பில்லா தேன் ஆனேன்,
நிறமில்லா மலர் ஆனேன்....

புதுமை வழியில்
புது தென்றலாய் வீசினாய் என்னில்!!!

நீயும்
உன் அன்பும்
நம் காதலும்.....

என் மனமெங்கும் நிறைந்திருக்கும்
என் சிந்தையிலே உறைந்திருக்கும்!!