Sunday, March 2, 2008

செல்லமாய் கோபித்து...

உன் கவிதை வரிகளில்
நானிருக்கிறேன் என்று தெரிந்தும்
"யாருக்காக" எழுதினாய் என
கோபிப்பதில் ஒரு
இன்பம் எனக்கு ....


"கோபப்படும்போது இன்னும் அழகாகயிருக்கிறாய்"என
நீ சொல்வது பொய்யென்று தெரிந்தும்
ரசிக்கிறதே என் வெட்கம்
என்ன செய்ய நான்?...



இனி உன்னுடன் பேச
போவதில்லை என்ற
என் உதடுகளை
'பேசவே பேசாதே' என
கவ்விக் கொண்டால்
என்ன அர்த்தம்?


என்னைத்தவிர வேறு
எந்தப்பெண்ணிடம் நீ
பேசினாலும்
சண்டையிடத் தோன்றுகிறது
ஆனால் அது....
சந்தேகமில்லா சண்டை
என்பது தெரியுமாடா உனக்கு?

ஏதேனும் ஒரு காரணத்திற்காக
நீ சண்டையிடுவதெல்லாம்
'சங்கமத்தில்' முடிப்பதற்காகதான்
என்பதை சரசத்தில்தான்
உணர்ந்தேன்.....
அது உண்மையா??


'அவனிடம் என்ன அரட்டை?
இவனிடம் என்ன பேச்சு?'
என நீ உரிமையுடன்
கோபித்துக்கொள்ளும் போதெல்லாம்...
"அப்படித்தான் கடலை போடுவேன், உனக்கென்ன" என
வீம்புக்கென்று வம்பிழுத்து
வெறுப்பேத்துவேன் தெரியுமா?....


மழையில் நான் நினைந்தால்
மழை துளியும் என்னை
அக்கோலத்தில் பார்க்க கூடாது என
குடை பிடிப்பாயே.........
உன்னை என்னவென்று சொல்வது???

தொலைவில் நீ
இங்கு
தனிமையில் நான்
கேட்க ஆயிரம் கேள்விகளுடன்....
விடையளிக்காமல்
விடை கொடுத்துவிடாதே.....ப்ளீஸ்!!

29 comments:

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

எழுதிய கவிதை யாருக்கு என கோபிப்பதும்,
அடுத்தவரிடம் என்ன பேச்சு எனக்கேட்டால் வம்பிழுப்பதுமாய் குறும்புகளை அழகாய் வடித்துள்ளீர்கள் இப்ரவீனா!

அருமை :))

//விடையளிக்காமல்
விடை கொடுத்துவிடாதே.....ப்ளீஸ்!!
//

தொட்டது!! ஏக்கங்கள் அழகு :))

நவீன் ப்ரகாஷ் said...

ப்ரவீணா..
கோபிப்பதே அழகு... அதில் செல்லமாக கோபிப்பது அழகோ அழகு !! :))

நவீன் ப்ரகாஷ் said...

//உன் கவிதை வரிகளில்
நானிருக்கிறேன் என்று தெரிந்தும்
"யாருக்காக" எழுதினாய் என
கோபிப்பதில் ஒரு
இன்பம் எனக்கு ....//

:))) இப்படியும் ஒரு இன்பமா..?!!!

நவீன் ப்ரகாஷ் said...

//மழையில் நான் நினைந்தால்
மழை துளியும் என்னை
அக்கோலத்தில் பார்க்க கூடாது என
குடை பிடிப்பாயே.........
உன்னை என்னவென்று சொல்வது???//

:))) மிகவும் ரசித்தேன் !!!

கோபிநாத் said...

கவிதை அழகு ;)

ஜி said...

//கவ்விக்கிக் //

meaning please???

//மழையில் நான் நினைந்தால்
மழை துளியும் என்னை
அக்கோலத்தில் பார்க்க கூடாது என
குடை பிடிப்பாயே.........
உன்னை என்னவென்று சொல்வது???//

intha varigala padicha udane oru punnagai vanthathu... superb lines :)))

gils said...

wow..aniyaaythu nalla irukunga..tabu shankar kavithaigal mathiri iruku..i mean..avara mathiriye nachunu kuttiya azhaga iruku unga varigal

வீ. எம் said...

உன் கவிதை வரிகளில்
நானிருக்கிறேன் என்று தெரிந்தும்
"யாருக்காக" எழுதினாய் என
கோபிப்பதில் ஒரு
இன்பம் எனக்கு //

இது அருமை,




//மழையில் நான் நினைந்தால்
மழை துளியும் என்னை//

இதில் ஒரு பிழை..

வாழ்த்துக்கள் ஜெனிபர் ஜேகப்

TBCD said...

இது யாரோ..யாரையோ கலாய்க்க ஆரம்பிக்கப்பட்டதுப் போல் தெரியுது நடக்கட்டும்

ஸ்ரீ said...

அருமையான அழகான எளிய நடை கவிதைகள் சூப்பர். ரசிக்கும் வண்ணம் இருந்தன. வாழ்த்துக்கள்.

sri said...

Very natural!

sri said...

Very natural!

Prabhu Chinnappan said...

heii..read all ur posts.. lovely poems yaar. gr88.. keep blogging

Praveena said...

\ sathish said...
எழுதிய கவிதை யாருக்கு என கோபிப்பதும்,
அடுத்தவரிடம் என்ன பேச்சு எனக்கேட்டால் வம்பிழுப்பதுமாய் குறும்புகளை அழகாய் வடித்துள்ளீர்கள் இப்ரவீனா!

அருமை :))

//விடையளிக்காமல்
விடை கொடுத்துவிடாதே.....ப்ளீஸ்!!
//

தொட்டது!! ஏக்கங்கள் அழகு :))\\


ஏக்கங்களையும் ரசித்துவிட்டீர்கள்:)))

Praveena said...

\\ நவீன் ப்ரகாஷ் said...
ப்ரவீணா..
கோபிப்பதே அழகு... அதில் செல்லமாக கோபிப்பது அழகோ அழகு !! :))\\

ஆம், செல்லமான கோபம்
ஒரு ' செல்லமான' அழகுதான்!

Praveena said...

\ நவீன் ப்ரகாஷ் said...
//உன் கவிதை வரிகளில்
நானிருக்கிறேன் என்று தெரிந்தும்
"யாருக்காக" எழுதினாய் என
கோபிப்பதில் ஒரு
இன்பம் எனக்கு ....//

:))) இப்படியும் ஒரு இன்பமா..?!!!\\

அப்படிதான்......அதிலும் ஒரு இன்பமுண்டு நவீன் ப்ரகாஷ்:)))

Praveena said...

\\ நவீன் ப்ரகாஷ் said...
//மழையில் நான் நினைந்தால்
மழை துளியும் என்னை
அக்கோலத்தில் பார்க்க கூடாது என
குடை பிடிப்பாயே.........
உன்னை என்னவென்று சொல்வது???//

:))) மிகவும் ரசித்தேன் !!!\\

ரசனைக்கு நன்றிங்க:))

Praveena said...

\\ கோபிநாத் said...
கவிதை அழகு ;)\

உங்கள் பின்னூட்டமும் அழகு:))

Praveena said...

\\\ ஜி said...
//கவ்விக்கிக் //

meaning please???

//மழையில் நான் நினைந்தால்
மழை துளியும் என்னை
அக்கோலத்தில் பார்க்க கூடாது என
குடை பிடிப்பாயே.........
உன்னை என்னவென்று சொல்வது???//

intha varigala padicha udane oru punnagai vanthathu... superb lines :)))\\


எழுத்துப்பிழையை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி ஜி:))

உங்களுக்கு புன்னகையை என் கவிவரிகள் வரவழைத்தது எண்ணி மகிழ்ந்தேன்!!!

Praveena said...

\ gils said...
wow..aniyaaythu nalla irukunga..tabu shankar kavithaigal mathiri iruku..i mean..avara mathiriye nachunu kuttiya azhaga iruku unga varigal\\

தபு சங்கரின் கவிதைகளுக்கு ரசிகை நான்,
அவரது கவிவரிகள் எங்கே......என் வரிகள் எங்கே??
ஒப்பீட்டிற்கு நன்றிங்க:))

Praveena said...

\ வீ. எம் said...
உன் கவிதை வரிகளில்
நானிருக்கிறேன் என்று தெரிந்தும்
"யாருக்காக" எழுதினாய் என
கோபிப்பதில் ஒரு
இன்பம் எனக்கு //

இது அருமை,




//மழையில் நான் நினைந்தால்
மழை துளியும் என்னை//

இதில் ஒரு பிழை..

வாழ்த்துக்கள் ஜெனிபர் ஜேகப்\

பிழையை சுட்டிக்காட்டிய நீங்கள், அதை சரிசெய்தும் சொல்லியிருக்கலாம்......!!!

Praveena said...

\\ TBCD said...
இது யாரோ..யாரையோ கலாய்க்க ஆரம்பிக்கப்பட்டதுப் போல் தெரியுது நடக்கட்டும்\\

கலாய்ப்பதற்காக கவிதை எழுதவது கடினம் சார்,
அப்படி எழுத வேண்டிய அவசியமும் எனக்கில்லை :))

Praveena said...

\\ ஸ்ரீ said...
அருமையான அழகான எளிய நடை கவிதைகள் சூப்பர். ரசிக்கும் வண்ணம் இருந்தன. வாழ்த்துக்கள்.\

உங்கள் தொடர் வருகைக்கு நன்றிங்க:))

Praveena said...

\\ srivats said...
Very natural!\

நன்றி:)

Praveena said...

\ Prabhu Aryan said...
heii..read all ur posts.. lovely poems yaar. gr88.. keep blogging\\

தொடர்ந்து எழுதிட நிச்சயம் முயல்கிறேன்:)

Thamiz Priyan said...

கவிதை அழகாக உள்ளது! :)

Praveena said...

\\ தமிழ் பிரியன் said...
கவிதை அழகாக உள்ளது! :)\\

கவிதையின் அழகை ரசித்து நீங்கள் பதித்த பின்னூட்டத்திற்கு நன்றிங்க:))

நிவிஷா..... said...

yeinunga Praveena akka,
unga kavithai ellamey nala ......remba nala irukuthunga,
anaaka.....yaroda kavithaiyin sayalo theriyuthunga, aaanaa yarunu than therileengakka,

lady tabu shankar rangeku thangakka eluthirukireenga,nice:-)

Natpodu
Nivisha

Praveena said...

\\ நிவிஷா..... said...
yeinunga Praveena akka,
unga kavithai ellamey nala ......remba nala irukuthunga,
anaaka.....yaroda kavithaiyin sayalo theriyuthunga, aaanaa yarunu than therileengakka,

lady tabu shankar rangeku thangakka eluthirukireenga,nice:-)

Natpodu
Nivisha\\

ஹாய் நிவிஷா,
தபு சங்கரின் கவிதைகளின் விசிறி நான்:))

யார் கவிதையின் சாயல் தெரிகிறது???