Friday, March 7, 2008

நம் காதல் காவியம்....

முதல் மடல்..
ஆன்லைனில் முதல் அரட்டை..
என்ன பேசுவதென்றே தெரியாமல் பேசிய
முதல் ஃபோன்கால்...
நாளொரு மேனியாக நட்பு வளர,
திடிரென காணாமல் போன நட்பை
தேடிய தேடல்...

பின்னொரு நாளில் நட்பு திரும்பிவருகையில்
நீ அடைந்த உவகை...
பிரிவு ஏற்படுத்திய ஏக்கம்
'மீண்டு' மலர்ந்த நட்பை ஆழமாக்க..
ஆழத்தில் நட்பு வேறூண்றியபோதுதான்
காதலை கண்டாய் அங்கு..
'நட்பில் காதலா?' மறுப்புடன் நான்...
உறுதியுடன் நீ!

என்னில் புதைந்திருந்த காதலை
தேடி எனக்குணர்த்த..
என் பிடிவாதங்களை தகர்க்க
நீ பட்ட பாடு..
பிடித்துப் போனது எனக்கு,
உன்னையும் உன் காதலையும்.....
ஏற்றுக்கொண்ட காதலை
கொண்டாடி மகிழ்ந்தாய் சிறுகுழந்தைபோல்,
அக்குழந்தைக்கு நான் பதித்த முதல் முத்தம்
கண்களில் நீர் உனக்கு
கரகரத்தது உன் குரல்....

முத்தம் பதித்த இதழுக்கு நீ பரிசளிக்க
முழுவதுமாய் விழித்துக் கொண்டன
எனக்குள் அனைத்தும்....
'மலர்ந்துக்கொண்டிருக்கிறேன் நான்' என
துடிக்கும் என் உதடுகள் உனக்குணர்த்த
உன் விரல்கள் வேகத்தடைகளை
மீறத்தொடங்கின....
மறுப்புடன் என் சிணுங்கள்
ரசிப்புடன் நீ...
முத்தத்தில் ஆரம்பித்து
மொத்தமாய் கலந்தது
நம் காதல்!!!

20 comments:

நவீன் ப்ரகாஷ் said...

காவியம் காதலுடன்..... மிகவும் அருமை.... ப்ரவீனா....

நவீன் ப்ரகாஷ் said...

//மறுப்புடன் என் சிணுங்கள்
ரசிப்புடன் நீ...
முத்தத்தில் ஆரம்பித்து
மொத்தமாய் கலந்தது
நம் காதல்!!!/

:)))))
என்ன சொல்ல...?? மிக அழகு... அதனினும் அழகு இந்த கவிதை மொத்தமும்...

ஸ்ரீ said...

நல்ல நடை வாழ்த்துக்கள்

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

//என்னில் புதைந்திருந்த காதலை
தேடி எனக்குணர்த்த..
என் பிடிவாதங்களை தகர்க்க
நீ பட்ட பாடு..
பிடித்துப் போனது எனக்கு,
உன்னையும் உன் காதலையும்.....
//

சுருக்கம் அழகு!!

:)))வரிகள் பதித்தவிதம் அருமை!

ராம்குமார் - அமுதன் said...

நல்ல அர்மையான பதிவுகள்.... தொடர வாழ்த்துக்கள்....

Praveena said...

\\Blogger நவீன் ப்ரகாஷ் said...

காவியம் காதலுடன்..... மிகவும் அருமை.... ப்ரவீனா....\\

நன்றி நவீன் ப்ரகாஷ் .

Praveena said...

\\ நவீன் ப்ரகாஷ் said...

//மறுப்புடன் என் சிணுங்கள்
ரசிப்புடன் நீ...
முத்தத்தில் ஆரம்பித்து
மொத்தமாய் கலந்தது
நம் காதல்!!!/

:)))))
என்ன சொல்ல...?? மிக அழகு... அதனினும் அழகு இந்த கவிதை மொத்தமும்...\\

சொல்ல வார்த்தைகள் பிடிபடவில்லையோ, ரசிப்பிற்கு நன்றி!

Praveena said...

\\ ஸ்ரீ said...

நல்ல நடை வாழ்த்துக்கள்\\

நன்றி :))

Praveena said...

\\Blogger sathish said...

//என்னில் புதைந்திருந்த காதலை
தேடி எனக்குணர்த்த..
என் பிடிவாதங்களை தகர்க்க
நீ பட்ட பாடு..
பிடித்துப் போனது எனக்கு,
உன்னையும் உன் காதலையும்.....
//

சுருக்கம் அழகு!!

:)))வரிகள் பதித்தவிதம் அருமை!\\

பின்னூட்டத்திற்கு நன்றி!

Praveena said...

\\ ராம்குமார் - அமுதன் said...

நல்ல அர்மையான பதிவுகள்.... தொடர வாழ்த்துக்கள்....\\

முதல் வருகைக்க்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!

கோபிநாத் said...

வரே..வா..சூப்பர் கவிதைங்க...;)

நிவிஷா..... said...

Praveena, muthal murai visit unga blog ku,
ipdi suda suda kavithai, athuvum oru ponnu.......superrrrrr,
'all the experience talkies' aaha irukuthunga, nice ...very very nice, wordless to express, hehehe:-)

natpodu
Nivisha

Praveena said...

\\ கோபிநாத் said...
வரே..வா..சூப்பர் கவிதைங்க...;)\\

நன்றி:)))

Praveena said...

\\ நிவிஷா..... said...
Praveena, muthal murai visit unga blog ku,
ipdi suda suda kavithai, athuvum oru ponnu.......superrrrrr,
'all the experience talkies' aaha irukuthunga, nice ...very very nice, wordless to express, hehehe:-)

natpodu
Nivisha\\

முதல் விஜயம்....நன்றி நிவிஷா,
மீண்டும் வாருங்கள்:))

High Power Rocketry said...

: )

ஜி said...

:))) அருமையானதொன்று...

தமிழன்-கறுப்பி... said...

கவிதைகளின் அழகு கூடிக்கொண்டே வருகிறது...வாழ்த்துக்கள்...

Praveena said...

\\ R2K said...
: )
\\

Scary profile picture:)-

Praveena said...

\\ ஜி said...
:))) அருமையானதொன்று...\\

thanks:))

Praveena said...

\\ தமிழன்... said...
கவிதைகளின் அழகு கூடிக்கொண்டே வருகிறது...வாழ்த்துக்கள்...\\

is it, really??

thanks tamilan!!