Tuesday, March 25, 2008

கனவில் உருவான 'நம்' கவிதை...

தூங்காத இரவுகளில்
தூக்கத்தை பறித்த
உன்
நினைவுகள்....
தூங்கும் இரவில்
கனவாக நிறைந்தன..

அந்தக் கனவில்
உருவான 'கவிதை'......

அங்குலம் அங்குலமாய்
வெப்பம் பரவி
அனல் துவங்கி
விரல்கள் மடங்கி
நரம்புகள் நடுங்கி
மேல் பரவி
கொடியிடை வளைந்து நாணலாகி
சலனம் தாண்டி
தேகம் அதிர்ந்து
சன்னமாய் உதித்தது
நம் குழந்தைக்கான ஆயத்தங்கள்....

Friday, March 7, 2008

நம் காதல் காவியம்....

முதல் மடல்..
ஆன்லைனில் முதல் அரட்டை..
என்ன பேசுவதென்றே தெரியாமல் பேசிய
முதல் ஃபோன்கால்...
நாளொரு மேனியாக நட்பு வளர,
திடிரென காணாமல் போன நட்பை
தேடிய தேடல்...

பின்னொரு நாளில் நட்பு திரும்பிவருகையில்
நீ அடைந்த உவகை...
பிரிவு ஏற்படுத்திய ஏக்கம்
'மீண்டு' மலர்ந்த நட்பை ஆழமாக்க..
ஆழத்தில் நட்பு வேறூண்றியபோதுதான்
காதலை கண்டாய் அங்கு..
'நட்பில் காதலா?' மறுப்புடன் நான்...
உறுதியுடன் நீ!

என்னில் புதைந்திருந்த காதலை
தேடி எனக்குணர்த்த..
என் பிடிவாதங்களை தகர்க்க
நீ பட்ட பாடு..
பிடித்துப் போனது எனக்கு,
உன்னையும் உன் காதலையும்.....
ஏற்றுக்கொண்ட காதலை
கொண்டாடி மகிழ்ந்தாய் சிறுகுழந்தைபோல்,
அக்குழந்தைக்கு நான் பதித்த முதல் முத்தம்
கண்களில் நீர் உனக்கு
கரகரத்தது உன் குரல்....

முத்தம் பதித்த இதழுக்கு நீ பரிசளிக்க
முழுவதுமாய் விழித்துக் கொண்டன
எனக்குள் அனைத்தும்....
'மலர்ந்துக்கொண்டிருக்கிறேன் நான்' என
துடிக்கும் என் உதடுகள் உனக்குணர்த்த
உன் விரல்கள் வேகத்தடைகளை
மீறத்தொடங்கின....
மறுப்புடன் என் சிணுங்கள்
ரசிப்புடன் நீ...
முத்தத்தில் ஆரம்பித்து
மொத்தமாய் கலந்தது
நம் காதல்!!!

Sunday, March 2, 2008

செல்லமாய் கோபித்து...

உன் கவிதை வரிகளில்
நானிருக்கிறேன் என்று தெரிந்தும்
"யாருக்காக" எழுதினாய் என
கோபிப்பதில் ஒரு
இன்பம் எனக்கு ....


"கோபப்படும்போது இன்னும் அழகாகயிருக்கிறாய்"என
நீ சொல்வது பொய்யென்று தெரிந்தும்
ரசிக்கிறதே என் வெட்கம்
என்ன செய்ய நான்?...



இனி உன்னுடன் பேச
போவதில்லை என்ற
என் உதடுகளை
'பேசவே பேசாதே' என
கவ்விக் கொண்டால்
என்ன அர்த்தம்?


என்னைத்தவிர வேறு
எந்தப்பெண்ணிடம் நீ
பேசினாலும்
சண்டையிடத் தோன்றுகிறது
ஆனால் அது....
சந்தேகமில்லா சண்டை
என்பது தெரியுமாடா உனக்கு?

ஏதேனும் ஒரு காரணத்திற்காக
நீ சண்டையிடுவதெல்லாம்
'சங்கமத்தில்' முடிப்பதற்காகதான்
என்பதை சரசத்தில்தான்
உணர்ந்தேன்.....
அது உண்மையா??


'அவனிடம் என்ன அரட்டை?
இவனிடம் என்ன பேச்சு?'
என நீ உரிமையுடன்
கோபித்துக்கொள்ளும் போதெல்லாம்...
"அப்படித்தான் கடலை போடுவேன், உனக்கென்ன" என
வீம்புக்கென்று வம்பிழுத்து
வெறுப்பேத்துவேன் தெரியுமா?....


மழையில் நான் நினைந்தால்
மழை துளியும் என்னை
அக்கோலத்தில் பார்க்க கூடாது என
குடை பிடிப்பாயே.........
உன்னை என்னவென்று சொல்வது???

தொலைவில் நீ
இங்கு
தனிமையில் நான்
கேட்க ஆயிரம் கேள்விகளுடன்....
விடையளிக்காமல்
விடை கொடுத்துவிடாதே.....ப்ளீஸ்!!

Saturday, March 1, 2008

காதலித்துப் பார்....

காதலித்துப் பார்
கவிதை வருமென்றார்கள்
கவிஞனை காதலித்து
கவிதையானேன்..


கணவில் முகம் தெரியா
இளவரசன் செய்த லீலைகள்
நிஜத்தில் நீ செய்தபோது- என்
மன்னனாய் உனைக் கண்டேன்


மாலை மயக்கத்தில்
மன்னனின் மார்பில்
மலரும் மலராய் நான்...
மலரச் செய்தது நீ

உன் மார்பில்
என் நகக்கோலம்..
நகைப்பில் நாம்
நடுக்கத்தில் நம் தேகம்...


கண்களாலே கற்பை
சூரையாடிவிட்டு
ஒன்றும் அறியா சிறுவன் போல்
எப்படியடா உன்னால் மட்டும்
பாசாங்கு செய்ய முடிகிறது?


எங்கிருந்து ஆரம்பித்தாலும்
கடைசியாக என்
இதழ்களில் தான் முடிகிறது
உன் முத்தங்கள்..
ஏன் மீண்டும் நான்
ஆரம்பிப்பதற்காகவா??


எல்லா கவிதையும்
கறபனை மட்டுமே என்றிருந்தேன்..
என்னை கவிதையாக்கி
கவிஞன் நீ ரசிக்கும்வரை...