Saturday, March 1, 2008

காதலித்துப் பார்....

காதலித்துப் பார்
கவிதை வருமென்றார்கள்
கவிஞனை காதலித்து
கவிதையானேன்..


கணவில் முகம் தெரியா
இளவரசன் செய்த லீலைகள்
நிஜத்தில் நீ செய்தபோது- என்
மன்னனாய் உனைக் கண்டேன்


மாலை மயக்கத்தில்
மன்னனின் மார்பில்
மலரும் மலராய் நான்...
மலரச் செய்தது நீ

உன் மார்பில்
என் நகக்கோலம்..
நகைப்பில் நாம்
நடுக்கத்தில் நம் தேகம்...


கண்களாலே கற்பை
சூரையாடிவிட்டு
ஒன்றும் அறியா சிறுவன் போல்
எப்படியடா உன்னால் மட்டும்
பாசாங்கு செய்ய முடிகிறது?


எங்கிருந்து ஆரம்பித்தாலும்
கடைசியாக என்
இதழ்களில் தான் முடிகிறது
உன் முத்தங்கள்..
ஏன் மீண்டும் நான்
ஆரம்பிப்பதற்காகவா??


எல்லா கவிதையும்
கறபனை மட்டுமே என்றிருந்தேன்..
என்னை கவிதையாக்கி
கவிஞன் நீ ரசிக்கும்வரை...

13 comments:

said...

ப்ரவீனா :)))

காதலாகிவிட்ட கவிதை அழகு :))

said...

மலர்ந்த எல்லா கவிதைகளுமே புன்னகையையும்... காதலையும் மலரச்செய்கின்றன...

//எங்கிருந்து ஆரம்பித்தாலும்
கடைசியாக என்
இதழ்களில் தான் முடிகிறது
உன் முத்தங்கள்..
ஏன் மீண்டும் நான்
ஆரம்பிப்பதற்காகவா??//

படிக்க படிக்க வெட்கங்களை திருடிய கவிதை.. மிக ரசித்தேன்... :)))

said...

//எங்கிருந்து ஆரம்பித்தாலும்
கடைசியாக என்
இதழ்களில் தான் முடிகிறது
உன் முத்தங்கள்..
ஏன் மீண்டும் நான்
ஆரம்பிப்பதற்காகவா??//

ஹா..ஹா.. சூப்பரு..:)

said...

//காதலித்துப் பார்
கவிதை வருமென்றார்கள்
கவிஞனை காதலித்து
கவிதையானேன்..//

அட!!

//எங்கிருந்து ஆரம்பித்தாலும்
கடைசியாக என்
இதழ்களில் தான் முடிகிறது
உன் முத்தங்கள்..
ஏன் மீண்டும் நான்
ஆரம்பிப்பதற்காகவா??//

முடிவில்லா தொடக்கங்கள் :) சுருக்கமாய் ஒரு முடிவிலி! புன்னகைத்தேன்!

said...

இதுபோல் காதல் கவிதைகள் இதுவரை
பார்த்ததில்லை ஏனெனில் நான் அதிகம் பார்த்ததெல்லாம் ஆணின் பார்வையிலிருக்கும் கவிதைகள்தான்!

காதலாகிய கவிதையும், கவிதையாகிய காதலும் பின் கற்பனை கடந்த கவிதையுமாய் கவிதைகள் அழகு இப்ரவீனா :)

said...

எங்கிருந்து ஆரம்பித்தாலும்
கடைசியாக என்
இதழ்களில் தான் முடிகிறது
உன் முத்தங்கள்..
ஏன் மீண்டும் நான்
ஆரம்பிப்பதற்காகவா??

வரிகள் அருமை. அழகான தமிழ் வார்த்தைகள் உதாரணத்திற்கு "பாசாங்கு"
ரொம்ப நாள்களாக கண்களில் படாத ஒரு அற்புதமான வார்த்தை. ரசித்தேன்

said...

ப்ரவீனா..வணக்கம் ;))

உங்கள் வார்த்தைகள் ரசிக்கும் படியாக இருக்கிறது.

வாழ்த்துக்கள் ;)


\\எங்கிருந்து ஆரம்பித்தாலும்
கடைசியாக என்
இதழ்களில் தான் முடிகிறது
உன் முத்தங்கள்..
ஏன் மீண்டும் நான்
ஆரம்பிப்பதற்காகவா??\\

ஆஹா..ஆஹா..சூப்பரு ;))

said...

\\sathish said...
இதுபோல் காதல் கவிதைகள் இதுவரை
பார்த்ததில்லை ஏனெனில் நான் அதிகம் பார்த்ததெல்லாம் ஆணின் பார்வையிலிருக்கும் கவிதைகள்தான்!
\\

சரியாக சொன்னிங்க சதீஷ் ;)

வழிமொழிகிறேன் ;;))

said...

\\ நவீன் ப்ரகாஷ் said...
ப்ரவீனா :)))

காதலாகிவிட்ட கவிதை அழகு :))\\

அழகான பின்னூட்டத்திற்கு நன்றி நவீன் ப்ரகாஷ்:))

said...

:)))

epdi ippadi romantica ellaam ezutha mudiyuthu??

arumaiyaana varigal :))

said...

\\ ஜி said...
:)))

epdi ippadi romantica ellaam ezutha mudiyuthu??

arumaiyaana varigal :))\

ரோமெண்டிக்கா இருக்குதுங்களா கவிவரிகள்:)

said...

பெண் பார்வையில் காதல் கவிதைகள் அழகாகவே இருக்கின்றன :)

said...

\\ பிரேம்குமார் said...
பெண் பார்வையில் காதல் கவிதைகள் அழகாகவே இருக்கின்றன :)\\

நன்றி பிரேம்குமார்:))