Tuesday, March 25, 2008

கனவில் உருவான 'நம்' கவிதை...

தூங்காத இரவுகளில்
தூக்கத்தை பறித்த
உன்
நினைவுகள்....
தூங்கும் இரவில்
கனவாக நிறைந்தன..

அந்தக் கனவில்
உருவான 'கவிதை'......

அங்குலம் அங்குலமாய்
வெப்பம் பரவி
அனல் துவங்கி
விரல்கள் மடங்கி
நரம்புகள் நடுங்கி
மேல் பரவி
கொடியிடை வளைந்து நாணலாகி
சலனம் தாண்டி
தேகம் அதிர்ந்து
சன்னமாய் உதித்தது
நம் குழந்தைக்கான ஆயத்தங்கள்....

18 comments:

said...

ச்ச்ச்சீய்ய்.. வெட்கமாக இருக்கிறது...
இவ்வளவு காதலாகவா எழுதுவது..?? :))))

அழகோ அழகு ஜெனிபர் !!! :)))

said...

//அங்குலம் அங்குலமாய்
வெப்பம் பரவி
அனல் துவங்கி
விரல்கள் மடங்கி
நரம்புகள் நடுங்கி
மேல் பரவி
கொடியிடை வளைந்து நாணலாகி
சலனம் தாண்டி
தேகம் அதிர்ந்து
சன்னமாய் உதித்தது..//

மலரினும் மெல்லிது.... இதுதானா..?? மிக நுட்பமாக .... மிக அழகாக ... ஒரு பூ மலர்வதைப் போல் இதழ் இதழாக மலர்ந்த வார்த்தைகள் ..... ப்ரவீணா..... இந்த முறையும் மிக அழகாக மலர்ந்திருக்கிரது .... உங்கள் கவிக்குழந்தை... :))

said...

//
அங்குலம் அங்குலமாய்
வெப்பம் பரவி
அனல் துவங்கி
விரல்கள் மடங்கி
நரம்புகள் நடுங்கி
மேல் பரவி
கொடியிடை வளைந்து நாணலாகி
சலனம் தாண்டி
தேகம் அதிர்ந்து
சன்னமாய் உதித்தது
நம் குழந்தைக்கான ஆயத்தங்கள்....
//
இதனினும் அழகாய் காதல் மொழி பேச இயலாது போங்கள் :))

சரம் போல் தொடரும் வார்த்தைகள்! நீண்ட கவிவாக்கியம் அழகு :)

said...

//
தூங்காத இரவுகளில்
தூக்கத்தை பறித்த
உன்
நினைவுகள்....
தூங்கும் இரவில்
கனவாக நிறைந்தன..

அந்தக் கனவில்
உருவான 'கவிதை'......
//

கவிதைக்கு தொடக்கமும் கவிதையாய்! தொடரட்டும் கனவான நினைவுகள் இப்ரவீனா :)

said...

நளினம்...மிக அழகு...

said...

//அங்குலம் அங்குலமாய்
வெப்பம் பரவி//

இது மட்டும் போதும்...
(எனக்கு பிடித்த வார்தைகள்)

said...

நவீன் அண்ணன் சொன்னது..
//ச்ச்ச்சீய்ய்.. வெட்கமாக இருக்கிறது...
இவ்வளவு காதலாகவா எழுதுவது..?? :))))

அழகோ அழகு ஜெனிபர் !!! :)))//

இது அழகு...

(அண்ணனுக்கேவா...)

said...

\\ நவீன் ப்ரகாஷ் said...
ச்ச்ச்சீய்ய்.. வெட்கமாக இருக்கிறது...
இவ்வளவு காதலாகவா எழுதுவது..?? :))))

அழகோ அழகு ஜெனிபர் !!! :)))\\

உங்கள் அழகான ரசனைக்கும், தொடர் வருகைக்கும் நன்றி:-)

said...

\\ நவீன் ப்ரகாஷ் said...
//அங்குலம் அங்குலமாய்
வெப்பம் பரவி
அனல் துவங்கி
விரல்கள் மடங்கி
நரம்புகள் நடுங்கி
மேல் பரவி
கொடியிடை வளைந்து நாணலாகி
சலனம் தாண்டி
தேகம் அதிர்ந்து
சன்னமாய் உதித்தது..//

மலரினும் மெல்லிது.... இதுதானா..?? மிக நுட்பமாக .... மிக அழகாக ... ஒரு பூ மலர்வதைப் போல் இதழ் இதழாக மலர்ந்த வார்த்தைகள் ..... ப்ரவீணா..... இந்த முறையும் மிக அழகாக மலர்ந்திருக்கிரது .... உங்கள் கவிக்குழந்தை... :))\\

கவிஞரின் விமர்சனமும் கவித்துவமாக அமைவது விந்தையல்லவே!!!

நன்றி நவீன் ப்ரகாஷ்.

தங்களின் வலைதளத்தில் நெடுநாட்களாக கவிமலர் மலரவில்லையே? எப்போது மலரும்...

said...

\\ sathish said...
//
அங்குலம் அங்குலமாய்
வெப்பம் பரவி
அனல் துவங்கி
விரல்கள் மடங்கி
நரம்புகள் நடுங்கி
மேல் பரவி
கொடியிடை வளைந்து நாணலாகி
சலனம் தாண்டி
தேகம் அதிர்ந்து
சன்னமாய் உதித்தது
நம் குழந்தைக்கான ஆயத்தங்கள்....
//
இதனினும் அழகாய் காதல் மொழி பேச இயலாது போங்கள் :))

சரம் போல் தொடரும் வார்த்தைகள்! நீண்ட கவிவாக்கியம் அழகு :)\


மனம்திறந்த பாராட்டிற்கு நன்றி:)

said...

\ sathish said...
//
தூங்காத இரவுகளில்
தூக்கத்தை பறித்த
உன்
நினைவுகள்....
தூங்கும் இரவில்
கனவாக நிறைந்தன..

அந்தக் கனவில்
உருவான 'கவிதை'......
//

கவிதைக்கு தொடக்கமும் கவிதையாய்! தொடரட்டும் கனவான நினைவுகள் இப்ரவீனா :)\

உங்கள் வாழ்த்துக்கள் நிறைவாகட்டும், நன்றி சதீஷ்:)

said...

\ தமிழன்... said...
நளினம்...மிக அழகு...\\

தமிழனுக்கு நன்றி:)

said...

\\ தமிழன்... said...
//அங்குலம் அங்குலமாய்
வெப்பம் பரவி//

இது மட்டும் போதும்...
(எனக்கு பிடித்த வார்தைகள்)\\

:)))
நன்றி

said...

\\ தமிழன்... said...
நவீன் அண்ணன் சொன்னது..
//ச்ச்ச்சீய்ய்.. வெட்கமாக இருக்கிறது...
இவ்வளவு காதலாகவா எழுதுவது..?? :))))

அழகோ அழகு ஜெனிபர் !!! :)))//

இது அழகு...

(அண்ணனுக்கேவா...)\\

கவிஞர் நவீன் ப்ரகாஷ் தங்களின் அண்ணனா???

said...

:)))) ஒன்னும் சொல்றதுக்கு இல்ல....

said...

வார்த்தை கோர்வை அட்டகாசம் :))

said...

\\ஜி said...
:)))) ஒன்னும் சொல்றதுக்கு இல்ல....\\

சொல்ல முடியா வெட்கம் ,
எழுத்தாளரின் கரங்களை கவ்விக்கொண்டதோ???

said...

\\ ஜி said...
வார்த்தை கோர்வை அட்டகாசம் :))\\

நன்றி:))