Monday, June 30, 2008

கோபத்திற்கு நிறம் உண்டா???

உன் ஆசையை காட்டுவதற்காக
இப்படியா
வார வாரம் என்னிடம் கோபம் பட்டு
பேசாமல் இருக்கிறாய்
சில தினங்கள்

உன் கோபங்களை விதைப்பதற்கு
என் மனதா கிடைத்தது
பாவம் அது வளர
என் கண்ணீரைக் கடன்
கேட்கிறது

உன் ஆண்மையை என்னிடம்
காட்ட விரும்புகிறாய் என்றால்
சொல்லியிருக்கலாமே
அதைவிட்டு என் மேல்
அடிக்கடி கோவித்துக் காட்டுகிறாய்

ஆசை
இருந்தால்தான்
கோவம் வருமான்னு
தெரியாது
ஆனால்
என் மீது கோபப்படும்
போதுதான் உன் ஆசைகள்
எல்லாம் புரிகிறது...

உன் நிறம் எனக்கு
பிடித்திருக்கும் போது
உன் கோபத்தின்
நிறம் மட்டும்
பிடிக்காமலா போய்விடும்???

16 comments:

said...

வாங்க வாங்க பிரவீணா எங்க போயிட்டிங்க இத்தனைநாளா...:)

said...

/உன் ஆசையை காட்டுவதற்காக
இப்படியா
வார வாரம் என்னிடம் கோபம் பட்டு
பேசாமல் இருக்கிறாய்
சில தினங்கள்/

ஆசையை இப்படி வேற காட்டலாமா :)

said...

/உன் கோபங்களை விதைப்பதற்கு
என் மனதா கிடைத்தது
பாவம் அது வளர
என் கண்ணீரைக் கடன்
கேட்கிறது/

அட கோபத்தை வளர விடாதிங்க..:)

said...

/
ஆசை
இருந்தால்தான்
கோவம் வருமான்னு
தெரியாது
ஆனால்
என் மீது கோபப்படும்
போதுதான் உன் ஆசைகள்
எல்லாம் புரிகிறது...///

ஊடலில் தானே காதல் தெரிகிறது...

நல்ல வரிகள்...

said...

/
உன் நிறம் எனக்கு
பிடித்திருக்கும் போது
உன் கோபத்தின்
நிறம் மட்டும்
பிடிக்காமலா போய்விடும்???///

அதானே? அழகு வரிகள்...

ம்ம்ம்.... நடக்கட்டும் நடக்கட்டும்..;)

said...

//உன் கோபங்களை விதைப்பதற்கு
என் மனதா கிடைத்தது
பாவம் அது வளர
என் கண்ணீரைக் கடன்
கேட்கிறது//

அருமை:)

said...

அட ஜெனிபர் போஸ்ட் போட்டாச்சா..? ரொம்ப நாளா மேடம் தூங்கிட்டு இருந்திங்களோ....எழுதாம...?? :))))

said...

//உன் கோபங்களை விதைப்பதற்கு
என் மனதா கிடைத்தது
பாவம் அது வளர
என் கண்ணீரைக் கடன்
கேட்கிறது //

அட உங்க மென்மையான மனசிலே எதையச்சும் விதைக்கணும்னு நெனச்சுட்டாரோ என்னமோ ...?? ;))
கோபப்படுற மாதிரி நீங்க என்ன பண்ணுனே ஜெனிஃபர்..?? ;)))))

said...

//ஆனால்
என் மீது கோபப்படும்
போதுதான் உன் ஆசைகள்
எல்லாம் புரிகிறது... //

ஆஹா கோபத்துக்கு இப்படி வேற அர்த்தம் இருக்கா..?? அஹா.... தெரியாம போச்சே.. ;)))))

said...

//உன் நிறம் எனக்கு
பிடித்திருக்கும் போது
உன் கோபத்தின்
நிறம் மட்டும்
பிடிக்காமலா போய்விடும்??? //

இப்படிச் சொல்லியே கவுத்துடுங்க.. :)))

கலக்கிட்டே ஜெனி... வாழ்த்துக்கள்...

said...

//உன் நிறம் எனக்கு
பிடித்திருக்கும் போது
உன் கோபத்தின்
நிறம் மட்டும்
பிடிக்காமலா போய்விடும்???//

வாவ்!! வாவ்!! உங்க போஸ்ட் எல்லாம் சூப்பர்! ரஜினி படம் மாதிரி உங்க கவிதை எப்ப வரது எப்படி வரதுனு தெரியல்ல.. ஆனா வரவேண்டிய நேரத்துல செம்ம தூளா வரது! really nice one! கலக்குங்க யக்கோவ்!

said...

தமிழன்


கவிதை வரிகளை பற்றின உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

said...

நவீன் ப்ரகாஷ்

\இப்படிச் சொல்லியே கவுத்துடுங்க.. :)))

கலக்கிட்டே ஜெனி... வாழ்த்துக்கள்...




கவிதைகள் ரசிப்பிற்கே அன்றி கவிழ்பதற்காக அல்ல;

said...

ரசிகன்

நன்றி:-)

said...

\\ Thamizhmaangani said...
//உன் நிறம் எனக்கு
பிடித்திருக்கும் போது
உன் கோபத்தின்
நிறம் மட்டும்
பிடிக்காமலா போய்விடும்???//

வாவ்!! வாவ்!! உங்க போஸ்ட் எல்லாம் சூப்பர்! ரஜினி படம் மாதிரி உங்க கவிதை எப்ப வரது எப்படி வரதுனு தெரியல்ல.. ஆனா வரவேண்டிய நேரத்துல செம்ம தூளா வரது! really nice one! கலக்குங்க யக்கோவ்!\


நீண்ட இடைவெளிக்குப் பின் கவிதை பதிவிட்டும், நீங்க மறக்காமல் கவிதை பதிவினை படித்தது அறிந்து மகிழ்ந்தேன், நன்றி:)

said...

தமிழன்
ரசிகன்
நவீன் ப்ரகாஷ்
தமிழ்மாங்கனி

உங்கள் அனைவருக்கும் நன்றி.