Thursday, April 3, 2008

நீ பிறந்தது எனற்காக....!!

நோட்டுப்புத்தகத்தையும்...
எழுதுகோலையும்...
திறந்தே வைத்திருக்கிறேன்!

உன் பிறந்தநாள் கவிதைக்காக..

மையும் மனசும்...
கொட்டுவதற்குக் காத்திருக்கிறது...

ஆனால் தெரியவில்லை
எதிலிருந்து ஆரம்பிப்பது?

இமைகளிலிருந்து ஆரம்பிக்கவா...?
இதயத்திலிருந்து ஆரம்பிக்கவா...?

அடிக்கவரும்
அப்பாவிடமிருந்து தப்பித்து..
அம்மாவின் முந்தானைக்குள்
ஒளிந்துகொள்ளும் குழந்தைகளைப்போலவே..
உன் அன்பில்
ஒளிந்துகொண்டு எழுதட்டுமா..?

சோகத்தில் மடியில்
சுருண்டு படுத்திருக்கும்போது...
தலைகோதி விடும்
தாயைப்போலவே..
என்
இதயம் கோதி விடுகின்ற உன்
விமர்சனங்களிலிருந்து சில
வார்த்தைகள் திருடட்டுமா..?

என்ன எழுதுவது..?

ஒரு கவிதை..

வார்த்தைகள் வரவில்லை..
எழுத்துக்கள் எழவில்லை..

ஏன்? ஏன்? ஏன்?

கவிஞருக்குப் போய்
கவிதை எழுதுவதா..?

நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்லம் !!

7 comments:

said...

ப்ரவீணா :))
மீண்டும் ஒரு அழகான கவிதை
சூழ்கொண்டிருக்கிறது...

எங்கிருந்து ஆரம்பித்தால் என்ன..?
கவிதை கொட்டும் மனசு சுகமாக இருக்கும் போது... ? :))

என்ன சொல்ல..?? அழகென்பதைத்தவிர... ?? !!!

said...

//இமைகளிலிருந்து ஆரம்பிக்கவா...?
இதயத்திலிருந்து ஆரம்பிக்கவா...? //

:))) ஆரம்பித்தாலே போதுமே... எங்கிருந்தால் என்ன..? :)))

said...

//சோகத்தில் மடியில்
சுருண்டு படுத்திருக்கும்போது...
தலைகோதி விடும்
தாயைப்போலவே..
என்
இதயம் கோதி விடுகின்ற உன்
விமர்சனங்களிலிருந்து சில
வார்த்தைகள் திருடட்டுமா..? //

மிக மிக ரசித்தேன்.. உவமானமும்... உவமேயமும்.... மேலும் மேலும் கவிதை சூழ் கொள்ளக்கடவது உங்கள் பேனா.. ப்ரவீணா... :))))

said...

என்ன எழுத என்றே ஒரு கவிதை எழுதிவிட்டீர்கள்!! அருமைதான் இப்ரவீனா :))

said...

//சோகத்தில் மடியில்
சுருண்டு படுத்திருக்கும்போது...
தலைகோதி விடும்
தாயைப்போலவே..
என்
இதயம் கோதி விடுகின்ற உன்
விமர்சனங்களிலிருந்து சில
வார்த்தைகள் திருடட்டுமா..? //

:))

said...

//அடிக்கவரும்
அப்பாவிடமிருந்து தப்பித்து..
அம்மாவின் முந்தானைக்குள்
ஒளிந்துகொள்ளும் குழந்தைகளைப்போலவே..
உன் அன்பில்
ஒளிந்துகொண்டு எழுதட்டுமா..?//

இந்த வார்த்தைகளின் இடைவெளியில் நிரம்பியிருக்கும் அன்பைத் தொட்டு இங்கே ஒரு பின்னூட்டமிடவா?? ;-))

said...

//கவிஞருக்குப் போய்
கவிதை எழுதுவதா..? //

அதானே! கவிதைக்கே கவிதை எழுதுவதா!!??